News June 15, 2024

மண்டபம் கடற்கரையில் குவிந்த இறால்

image

விசைப்படகு மீனவர்களுக்கான 61 நாள் மீன்பிடி தடை நீங்கியதால் மண்டபம் கடலில் 400க்கும் மேற்பட்ட படகுகள் இன்று ஜூன் 15) அதிகாலை தொழிலுக்குச் சென்றன. அதிகம் பிடிபட்ட இறால், கணவாய், நண்டு ஆகிய மீன் இனங்களை மீனவர்கள் மதியம் கரை சேர்த்து விட்டு மீண்டும் தொழிலுக்குச் சென்றனர். இதில் வரத்து அதிகரிப்பால் முதல் ரக இறால் மீன் கிலோ ரூ.450, 2ம் ரக இறால் கிலோ ரூ.280 என வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

Similar News

News March 2, 2026

ராம்நாடு: அதிமுக – பாஜகவை நம்பக்கூடாது; MP

image

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில், திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழச்சி தங்கபாண்டியன் MP கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் பொய்யான வாக்குறுதிகள் அளித்து வருவதாகவும், அதை யாரும் நம்பக்கூடாது எனவும், தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். உடன் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 2, 2026

ராம்நாடு: இளம்பெண் தற்கொலையில் பகீர் திருப்பம்.!

image

உச்சிப்புளியை சேர்ந்தவர் சசிகலா (27). இவர் பாண்டி என்பவரை காதலித்த நிலையில், முருகன் என்பவருடன் திருமணமானது. காதல் கைகூடாததால் ஜன.17 ம் தேதி தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. இது குறித்து காவல்துறை நடத்திய ரகசிய விசாரணையில், வெளிநாட்டில் இருந்து வந்த சசிகலாவின் சகோதரர் அஜித், பாண்டியுடனான காதலை கைவிட கூறி தகராறு செய்ததும், இதில் அஜித் சசிகலாவை துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

News March 2, 2026

இராமநாதபுரம் இரவு ரோந்து காவல்துறை பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!