News April 5, 2025
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

கோவை கலெக்டர் இன்று வெளியிட்ட அறிக்கையில், கோயம்புத்தூர் 2024-25-ம் ஆண்டிற்கு சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், நகர்ப்புறங்களிலுள்ள சுய உதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகிய சமுதாய அமைப்புகள் மணிமேகலை விருதுபெற 30.04.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
Similar News
News April 5, 2025
கோவை: பூங்கோல் தாயார் கோயில்

கோவையில் எழில்கொஞ்சும் கோவனூரில், பழமையான பூங்கோல் தாயார் குகைக்கோயில் உள்ளது. அழகிய மலையிடுக்குகளின் இடையில், அம்மன் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் எல்லாம் சிறிய சிறிய நீருற்றுக்கள் என, இயற்கை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. குடும்பத்துடன் ஒரு நாள், இயற்கையுடன் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பூங்கோல் தாயார் குகைக்கோயில் ஒரு வரப்பிரசாதம். SHARE பண்ணுங்க.
News April 5, 2025
கோவைக்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, மழை பெய்ய வாய்ப்புள்ளதால் குடை கொண்டு போங்க. உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 5, 2025
BREAKING: கோவை வந்த C.M.ஸ்டாலின்

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று ஊட்டி செல்கிறார். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலமாக அவர் சற்று முன் கோவை வந்தடைந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தொடர்ந்து மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர் ரிசார்ட்டில் தங்க உள்ளார்.