News December 22, 2024
மணிமுத்தாறு அணை நாளை திறப்பு

நாளை(டிச.23) காலை 9 மணி அளவில் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மணிமுத்தாறு அணை திறக்கப்படுகிறது.
Similar News
News November 17, 2025
நெல்லை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை

நெல்லை மாவட்டத்தின் அனேக இடங்களான நெல்லை புது பஸ்டாண்ட், வள்ளியூர், தாழையூத்து, பண்குடி, ஏர்வாடி, மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (நவ.18) இப்பகுதிகள் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் பண்ணுங்க.
News November 17, 2025
நெல்லை: தனியார் வேலைவாய்ப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 21ம் தேதியன்று காலை 10 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். வேலைதேடுநரும் கல்வி சான்றுடன் பங்கேற்கலாம். கூடுதல் தகவல்களுக்கு நெல்லை Employment Office டெலிகிராம் சானலைப் பயன்படுத்தலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
நெல்லை போலீசில் பணியாற்ற வாய்ப்பு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் காத்தி மணி உத்தரவுபடி மாநகர ஊர்க்காவல் படையில் புதிய நபர்கள் சேர்க்கைக்கான தேர்வு வருகிற 22ஆம் தேதி பாளையங்கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காலை 7 மணி முதல் நடைபெறும். 60 ஆண்கள் 5 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றிதழ் மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


