News February 24, 2026

மணிப்பூர் படத்துக்கு BAFTA விருது.. PM மோடி வாழ்த்து

image

பிரிட்டனின் சர்வதேச திரைப்பட விழாவான BAFTA விருது விழாவில் மணிப்பூர் படமான ‘Boong’ திரைப்படம் விருது வென்றுள்ளது. இதற்கு PM மோடி, மணிப்பூர் மக்களுக்கும், படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நிலவும் சமூகப் பதற்றங்களுக்கு மத்தியில், பிரிந்து சென்ற தனது குடும்பத்தை மீண்டும் ஒன்று சேர்க்கப் போராடும் ஒரு சிறுவனின் பயணமே இப்படத்தின் கதை.

Similar News

News March 2, 2026

தமிழகத்தை உலுக்கிய முக்கிய வழக்கில் தீர்ப்பு!

image

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வரும் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை கோர்ட் அறிவித்துள்ளது. கடந்த 2020-ல் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் கைதான நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வர உள்ளது.

News March 2, 2026

தவெக + காங்கிரஸ் கூட்டணி.. கடைசி நேரத்தில் திருப்பம்

image

தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால், திமுக கூட்டணியில் இருந்து விலக காங்., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறைந்தபட்சம் 35 தொகுதிகளை காங்., கேட்கும் நிலையில், 25 தொகுதிகளையே வழங்க திமுக முன்வந்துள்ளதாம். இதனிடையே, ஹைதராபாத்தில் <<19279246>>ராகுலுடன் ஆதவ் அர்ஜூனா<<>> பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தமிழக தேர்தல் களத்தில் கடைசி நேர திருப்பமாக அமைந்துள்ளது.

News March 2, 2026

பொடுகு தொல்லையா? ஈசி தீர்வு இருக்கு

image

மக்களே, பொடுகு தொல்லை இருந்தால் முடி உதிர்வும் அதிகமாக இருக்கும். இதை எண்ணி இனி கவலைப்பட வேண்டாம். இந்த பிரச்னையை தீர்க்க, எலுமிச்சையும் தேனும் போதும். முதலில், 3 ஸ்பூன் தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து Scalp-ல் மாஸ்க் போல அப்ளை செய்யுங்க. 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் பொடுகு படிப்படியாக குறையுமாம். Try பண்ணி பாருங்க. அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!