News September 6, 2024

மணிப்பூரில் தீவிரவாத தாக்குதல்

image

மணிப்பூரின் பிஷ்ணுபூர் பகுதியில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிரவாதத் தாக்குதலில் 2 கட்டடங்கள் சேதம் அடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 45 km தொலைவில் அமைந்துள்ள குடியிருப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் அவர்கள் மீது எதிர்தாக்குதல் தொடுத்துள்ளனர்.

Similar News

News July 11, 2025

மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

image

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News July 11, 2025

6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம்!

image

ஆப்கனில் கொடுத்த கடனை கட்ட முடியாத தந்தை ஒருவர், பொம்மையுடன் விளையாட வேண்டிய தனது 6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை நிறுத்தாமல், ‘9 வயசு வரை குழந்தையை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாதீங்க’ என தலிபான் அரசின் தீர்ப்பளித்திருப்பது மேலும் அதிரவைக்கிறது. கண் துடைப்பாக, குழந்தையின் தந்தை & திருமணம் செய்தவரை கைது செய்துள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?

News July 11, 2025

செட்டில்மென்ட் ஓ.கே.. முடிந்தது மாறன்ஸ் பிரச்னை (1/2)

image

சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறன், அவரது சகோதரரான திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே ஏற்பட்ட பிரச்னை, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டால் முடிவுக்கு வந்துள்ளது. இப்பிரச்னைக்கு எப்படி தீர்வு காணப்பட்டது என்ற புதுத் தகவல் வெளியாகியுள்ளது. கலாநிதிக்கு ஜூன் 10-ல் தயாநிதி நோட்டீஸ் அனுப்பும் முன்பே, 2 பேர் இடையே ஸ்டாலின் சமரச பேச்சு நடத்தியதாகவும், ஆனால் 2 பேரும் அதற்கு உடன்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

error: Content is protected !!