News March 31, 2024
மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 பேருக்கு போலீசார் வேலை

குடியாத்தம் அலங்காநல்லூர் பாலாற்றில் மணல் கடத்துவதாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு நேற்று (மார்ச் 30) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் 2 மாட்டு வண்டிகளை மணலுடன் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
Similar News
News April 10, 2025
வேலூர் காவல்துறை ரோந்து பணி விவரம்

வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணி விவரம் இன்று (10-4-2025) வெளியிடப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் மக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல்துறை இரவு நேரங்களில் ரோந்து பணி செய்து வருகின்றனர். இதனால் மக்களின் பாதுகாப்பு மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து புகார் அளிக்க மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
News April 10, 2025
வேலூர் மாவட்டத்தில் 292 பணியிடங்கள் அறிவிப்பு

வேலூர் மாவட்ட பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 292 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. பணியிடங்களின் எண்ணிக்கை, அந்தந்த வட்டார அலுவலகங்களில் தகவல் பலகையில் ஒட்டப்படும். 18-40 வயதுடைய 10th பாஸ்/ஃபெயில் ஆன பெண்கள் பிடிஓ அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் ஏப்.26 மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். *செம வாய்ப்பு. தெரிந்த 18-40 வயது பெண்களுக்கு பகிரவும்*
News April 10, 2025
வேலூர் மாவட்ட வன அலுவலர் இடமாற்றம்

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலராக குருசாமி தபேலா பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள பசுமை தமிழ்நாடு திட்ட அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக வேலூர் மாவட்ட வன அலுவலராக ஊட்டி டேன்-டீ நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.