News November 3, 2025
மணல்மேடு அருகே முதியவர் தற்கொலை

மணல்மேடு அருகே இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆசை தம்பி (65) இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 3, 2025
மயிலாடுதுறை: பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டம் ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தார்
News November 3, 2025
மயிலாடுதுறை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
மயிலாடுதுறை: விரைவு ரயில் வழித்தடம் மாற்றம்

மயிலாடுதுறையிலிருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் நவம்பர் 1, 8 ,11, 15, 18 ஆகிய தேதிகளில் சனிக்கிழமைகளில் மட்டும் மதுரை, திண்டுக்கல் வழிக்கு பதிலாக காரைக்குடி மானாமதுரை வழியாக செங்கோட்டை செல்லும். செங்கோட்டையில் இருந்து நவம்பர் 5, 12, 19, 26 மற்றும் புதன்கிழமைகளில் மட்டும் மதுரை, திண்டுக்கல், மணப்பாறை வழியாக மயிலாடுதுறை வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


