News September 7, 2024

மணமேல்குடியில் கடத்தி செல்லப்பட்ட 188 கிலோ கஞ்சா பறிமுதல்

image

மணமேல்குடி கடற்கரையிலிருந்து இலங்கை பேச்சாளை கடற்கரைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான 188 கிலோ கஞ்சா பொட்டலங்களை நடுக்கடலில் வைத்து இலங்கையை சேர்ந்த படகில் மாற்ற முயன்ற போது, இலங்கை கடற்படை ரோந்து படகை கண்டதும் தமிழக மீன்பிடிப்படகில் இருந்த கடத்தல் காரர்கள் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசி சென்றுள்ளனர்.

Similar News

News November 6, 2025

வயலோகத்தில் பொது இடத்தில் மது அருந்திய இருவர் மீது வழக்கு

image

அன்னவாசல் அருகே உள்ள வயலோகம் முத்துமாரியம்மன் கோவில் நாடகமேடை மற்றும் வயலோகம் பேருந்து நிறுத்த பகுதியில் அன்னவாசல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த குடுமியான்மலை பகுதியை சேர்ந்த ரெங்கசாமி (25), பாண்டியராஜன் (25) ஆகிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

புதுகை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 6, 2025

புதுகை: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

image

மழையூர் கீழப்பட்டி சேர்ந்த 17 வயது இளைஞர், வம்பன் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தந்தை அமரேசன் செல்போன் பார்க்காதே என (நவ.3) கண்டித்து செல்போனை பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து வீட்டை விட்டு வெளியேறிய இளைஞர், நேற்று அந்த பகுதியில் கிணற்றில் இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றிய மழையூர் போலீசார் விசாரணை செய்கினர்.

error: Content is protected !!