News October 11, 2024

மணப்பெண் கோலத்தில் பகவதி அம்மன்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலில் கடந்த அக்.,3 அன்று நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து, நவராத்திரி விழாவின் 8 ஆம் நாளான நேற்று(அக்.,10) பகவதி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்தில் மணப்பெண் கோலத்தில் எழுந்தருளி திருக்கயிலை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 17, 2025

குமரி வேளாண் உள்கட்டமைப்பு: ரூ. 66 கோடி இலக்கு நிர்ணயம்

image

குமரி மாவட்டத்தில் வேளாண் உள்கட்டமைப்பு நிதியின்கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மகளிர் திட்டம் தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ. 45 கோடியும் என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டு உள்ளதாக ஆட்சியர் ஆர். அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News August 17, 2025

குமரியில் அடிக்கடி மின்தடையா? இனி கவலை வேண்டாம்..!

image

குமரி மக்களே.. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடிக்கடி நமது பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். இனி இது போன்ற மின்வெட்டு ஏற்பட்டால் உடனே #9498794987 என்ற எண்ணுக்கு கால் பண்ணி உங்க ஏரியாவுல எங்க மின்தடைனு தெரியப்படுத்துங்க. உடனே மின்சார துறை அதிகாரிகள் வந்து மின்தடையை சரிசெய்து சீரான மின் சேவை கிடைக்க உதவுவாங்க. உங்க நண்பர்களுக்கும் இத SHARE பண்ணுங்க.

News August 17, 2025

குமரி: பேருந்தில் அதிக கட்டணமா? COMPLAINT பண்ணுங்க..!

image

குமரி மக்களே! விடுமுறைகள் முடிந்து வேலைகள் மற்றும் சொந்த ஊர்களுக்கு இன்று பேருந்துகள் மூலம் செல்கீறீர்களா? அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகாரளியுங்க..<>இங்கு க்ளிக் <<>>செய்து அரசு கட்டணங்களை தெரிஞ்சுகிட்டு நிர்ணயிக்கபட்டதை விட அதிக கட்டணம் வசூலித்தால் ஆதாரத்துடன் 1800 599 1500 (அ) போக்குவரத்து நிர்வாக இயக்குனரிடம் 0462 – 2520982 எண்ணில் புகாரளியுங்க…SHARE பண்ணுங்க…

error: Content is protected !!