News May 22, 2024

மணப்பாறை: ரயிலில் பயணம்.. பலியான இன்ஜினியர்

image

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் உள்ள செல்போன் நிறுவனத்தில் மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில்,
நேற்று நாகர்கோவில்- தாம்பரம் சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்டார்.ரயில் மணப்பாறையை கடந்து வந்து கொண்டிருந்தபோது அவர் படியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News July 5, 2025

திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீங்கள் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் அல்லது யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தால் இன்றே வன்முறைக்கு முடிவுகட்ட பெண்களுக்கான 24 மணி நேர உதவி எண்கள் 1091 அழைக்க கூறியுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம். SHARE IT

News July 5, 2025

திருச்சி: ஓட்டுநர் கட்டுப்பட்டை இழந்த லாரி

image

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள அடைக்கம்பட்டி பகுதியில் இன்று பெரம்பலூர் பகுதியில் இருந்து துறையூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் நெல் மூட்டைகள் சாலையில் சிதறின. ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் துறையூர் – பெரம்பலூர் மாநில நெடுஞ்சாலையில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News July 4, 2025

உப்பிலியபுரம்: டிரைபல் கவுன்சிலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் மூலம் “சிக்கள் செல், தலசீமியா மரபணு” நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க, உப்பிலியபுரம் மற்றும் துறையூர் பகுதியில் ‘ஒரு டிரைபல் கவுன்சிலர்’ பணியிடம் ரூ.18,000 ஊதியத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!