News September 4, 2025

மணப்பாறை: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

திருச்சி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை கோட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 23ஆம் தேதி நான்காம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 2, 2026

திருச்சி: ரூ.60.95 லட்சம் பறிமுதல்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் கடந்த மார்ச்.15-ம் தேதி முதல் தற்போது வரை ரூ.60,95,575 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ.56,68,925 விடுவிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

News April 2, 2026

துவாக்குடி: என்ஐடியில் முதுகலை டிப்ளமோ படிப்பு தொடக்கம்!

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில், ஹெல்த் கேர் டெக்னாலஜி துறையில், புதிய முதுகலை டிப்ளமோ படிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. தனியார் மருத்துவமனையுடன் இணைந்து தொடங்கப்பட உள்ள இந்த படிப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், நேற்று கையெழுத்தானது. இந்நிகழ்வில் கல்லூரி இயக்குனர் அகிலா மற்றும் மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 2, 2026

திருச்சி: B.E படித்தவர்களுக்கு அறிய வாய்ப்பு

image

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கனரக வாகன தொழிற்சாலையில் காலியாகவுள்ள 450 Apprentice (அப்ரண்டிஸ்) பயிற்சியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 450
3. வயது: 15 – 24
4. கல்வித் தகுதி: டிப்ளமோ, B.E/B.Tech, Any Degree
5. கடைசி தேதி: 20.04.2026
6. மேலும் அறிய:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!