News May 18, 2024
மணப்பாறை: மகனை கையை வெட்டிய தந்தை.!

மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகேசன்.இவரது மகன் சதீஷ் குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகேசன் சதீஷ்குமாரை வெட்டியுள்ளார். இதில் இடது கையில் படுகாயம் ஏற்பட்டு சதீஸ் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 31, 2025
திருச்சி: நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆண்டி கவுண்டர் நேற்று புது மணியாரம்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள நான்கு சாலை வழியே நடந்து வந்த போது அதே திசையில் டேவிட் சகாயராஜ் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் ஆண்டி மீது மோதியது. இதில், அவர் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 31, 2025
திருச்சி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால்; இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News December 31, 2025
திருச்சியில் அதிர்ச்சி: மாணவர் விடுதியில் போதை கும்பல் கைது

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில், மாணவர்கள் என்ற போர்வையில் தங்கி இருந்து போதை மாத்திரை விற்பனை செய்த 4பேரை, தனிப்படை போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 180 போதை மாத்திரைகள் மற்றும் 3 கத்திகளையும் பறிமுதல் செய்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


