News March 30, 2025

மணப்பாறையில் எலக்ட்ரீசியன் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

மதுரை எம்கே புரத்தைச் சேர்ந்த முகேஸ்வரன் என்பவர் மணப்பாறையில் திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் நகை கடையில் கடந்த ஆறு மாதங்களாக எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இன்று ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மணப்பாறை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News January 25, 2026

திருச்சி: குழந்தை வரம் அருளும் அம்மன்!

image

திருச்சி மாவட்டம், துறையூரில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபாடு நடத்தினால் வாழ்வில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருகும் என்றும், சுகப்பிரசவத்துடன் கூடிய குழந்தை வரம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்க நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க !

News January 25, 2026

த.வெ.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர்

image

திருச்சி வயலூர் சாலையை பூர்வீகமாக கொண்டவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் வழிகாட்டுதல்படி வலம் வந்தவரும், அதிமுக அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக பணியாற்றிய கு.ப. கிருஷ்ணன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் அணியில் இருந்துவந்த இவர் இன்று தமிழக தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News January 25, 2026

திருச்சி டிஎஸ்பிக்கு விருது: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

image

2026, குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக செயல்பட்டு காவல்துறை பிரிவில் “தகைசால் பணிக்கான விருது” தமிழக காவல்துறை சேர்ந்த 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு காவல்துறை அதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!