News April 3, 2024
மணச்சநல்லூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு

மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெரகம்பி, எதுமலை கிராமத்தை இணைக்கும் சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை குண்டும், குழியுமாக வாகனம் எதுவும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் சாலை போடப்படாததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
திருச்சி: சிறப்பு சமரச தீர்வு முகாம் தொடக்கம்

திருச்சி நீதிமன்றத்தில் அமைந்துள்ள சமரச தீர்வு மையத்தில் சிறப்பு சமரச தீர்வு முகாம் தற்போது தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் இந்த முகாமில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வங்கிக் கடன், நிதி நிறுவன கடன், நுகர்வோர் வழக்குகள் மற்றும் ஏனைய வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருச்சி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுரை

திருச்சி காவல்துறை பொதுமக்களின் நலன் கருதி இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் போதைப் பொருட்கள் உங்கள் கனவுகளை அழித்து, உடல் நலம் குடும்ப நலத்தை பாதிக்கிறது. எனவே போதை பொருட்கள் இல்லாத ஆரோக்கிய பாதையை தேர்ந்தெடுக்க கூறியுள்ளது. மேலும்
போதைப் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்க கூறியுள்ளது.
News July 6, 2025
திருச்சி மக்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-0431-2415031,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.