News February 15, 2025
மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மஞ்சப்பை விருதுகளை சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார். அதன்படி பிளாஸ்டிக் இல்லாத முன் மாதிரியான பங்களிப்பை செய்த சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருது வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க மே மாதம் 1ஆம் தேதி கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்தார்.
Similar News
News October 22, 2025
புதுகை: சாலை விபத்தில் காவலர் பலி

திருமயம் அருகே நமண சமுத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சதீஷ் (43) நேற்று (அக்.21) பணி முடிந்து திருகோகர்ணம் காவலர் குடியிருப்பில் உள்ள அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புறகரப்பண்ணை அருகே காவலர் சதீஷின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மரத்தில் மோதியது. இதில், சதிஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
News October 22, 2025
புதுகை: இந்திய அஞ்சல் துறையியில் வேலை

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 22, 2025
புதுக்கோட்டை மாநகரில் 70 டன் குப்பைகள் அகற்றம்

தீபாவளி பண்டிகையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாநகரில் பட்டாசு உள்ளிட்ட குப்பைகள் 70 டன் வரை சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன. மழை பெய்தும் 415 தூய்மைப் பணியாளர்கள் 42 வார்டுகளில் பணியில் ஈடுபட்டனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகளில் திருக்கட்டளை பகுதியில் உள்ள மாநகர குப்பைக் கிடங்கில் சேர்க்கப்பட்டன. இந்த பணியை மாநகராட்சி ஆணையர் நாராயணன் கண்காணித்தார்.