News February 18, 2025
‘மஞ்சப்பை’ விருதிற்கு விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருது வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மே 1-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் https://tenkasi.nic.in மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வலைதளத்தில் WWW.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
தென்காசி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News February 16, 2026
தென்காசி: கேட் கீப்பருக்கு பாலியல் தொல்லை; நீதிமன்றம் அதிரடி

தென்காசி, பாவூர்ச்சத்திரம் ரயில் நிலைய கேட் கீப்பராக பணியாற்றி வந்த பெண்ணிடம், 2023 ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த அனீஸ் என்ற இளைஞர், அவர் தனியாக அறையில் இருந்த போது, அவரை கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இது குறித்த வழக்கில் அனீசுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே இவர் மீது பாலியல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 16, 2026
BREAKING: தவெகவில் இணைந்த தென்காசி Ex., எம்எல்ஏ

தென்காசி மாவட்டம், ராயகிரி பகுதியை சேர்ந்த வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தவெகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்த அவர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்றபோது அவரது அணியில் இருந்து செயல்பட்டார். தற்போது திமுகவில் செல்ல இருப்பதாக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார்.


