News December 18, 2025
மச்சக்காரி அமைரா தஸ்தூர்

‘அனேகன்’ திரைப்படம் மூலம் பிரபலமான நடிகை அமைரா தஸ்தூர், இன்ஸ்டாவில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதில், அவரது கண்கள் நட்சத்திரங்களை போல மின்னுகிறது. தன்னம்பிக்கையுடன் அழகு சேர்ந்துள்ள அவரது போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது. அவரது பிரகாசமான புன்னகை உடைய முகம் நிலவை ஓடி ஒளியச் செய்கிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
Similar News
News December 22, 2025
ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
News December 22, 2025
BREAKING: அதிரடி கைது.. தமிழகத்தில் அடுத்த சர்ச்சை

இலங்கைக்கு ₹6 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தியதாக இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஆனந்தராஜ், முருகன் ஆகியோரையும் கைது செய்த போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் விவகாரத்தை இந்து மக்கள் கட்சி கையில் எடுத்த நிலையில், ரவிச்சந்திரன் விவகாரத்தை திமுக விமர்சித்து வருகிறது.
News December 22, 2025
கூட்டணிக்கு அழைப்பு.. முடிவை கூறியது தவெக

திமுகவை வீழ்த்த NDA கூட்டணியில் தவெக இணையவேண்டும் என தமிழருவி மணியன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் அந்த அழைப்பை தவெகவின் அருண்ராஜ் நிராகரித்துள்ளார். தமிழருவி மணியன் கூறியது அவருடைய கருத்து என கூறிய அவர், தங்களுக்கு அவரது அறிவுரை தேவையில்லை என பதிலளித்துள்ளார். மேலும் யாருக்கு அறிவுரை தேவையோ அவருக்கு கொடுத்தால் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.


