News January 16, 2026
மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்புக்கான இரு நாள் பயிற்சி வரும் 19, 20ம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. சாம்பார், ரசம், கறிமசாலா, பருப்பு பொடி, சிக்கன் 65 மசாலா, ரெடிமேட் பேஸ்ட் தயாரிப்பும், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பும் கற்பிக்கப்படும். கட்டணம் ரூ.1,770. தொடர்புக்கு: 94885 18268.
Similar News
News January 25, 2026
பாப்பநாயக்கன்பாளையம் அருகே விபத்து: 2 பேர் பலி

இடையர்பாளையத்தைச் சேர்ந்த ரோஹித் (18). இவர் தனது நண்பர் சுதர்சனுடன் (22) காரில் நேற்று சென்று கொண்டு இருந்தார். அப்போது பாப்பநாயக்கன்பாளையம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இவ்விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 25, 2026
கோவை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கோவை மாவட்ட மக்கள் 0422-2449550 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
கோவை மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <


