News March 29, 2025
மங்கு, பொங்கு, மரண சனியில் இருந்து விடுபட ?

சூரியனார்கோயிலில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில். இங்கு சிரசில் சிவலிங்கத்துடன் குழந்தை வடிவில் சனிபகவான் பாலசனியாக அருள்பாலிக்கிறார்.இந்த மண்ணை மிதித்தவரை எமதர்மன் நெருங்க கூடாது என சிவபெருமான் கட்டளையிட்டதாக ஐதீகம். எம பயம் நீக்கும் பால சனிபகவானை வணங்க மங்கு, பொங்கு, மரண சனி ஆகிய மூன்றின் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை. உடனே Share பண்ணுங்க..
Similar News
News April 1, 2025
நாகையில் உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

நாகை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. அரசு அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மாணவர்கள் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் ஆகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News April 1, 2025
கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியது

மயிலாடுதுறை மாவட்டம் குட்டியாண்டியூரைச் சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் லட்சுமணன், சந்தோஷ், நவலிங்கம் ஆகிய மூவரும் சனிக்கிழமை மதியம் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு 12 நாட்டுக்கல் மைல் தொலைவில் மீன் பிடிக்க வலை விரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போது படகின் டிரைவர் லட்சுமணனை படகில் காணவில்லை. இந்த நிலையில் வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியது.
News April 1, 2025
வீட்டு வேலை பணியாளர்களுக்கு சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்தில் வீட்டு வேலையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அவர்களை நல வாரியத்தில் சேர்க்கும் பொருட்டு நாகை மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. வருகிற 15ஆம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் வீட்டு வேலை பணியாளர்கள் பங்கேற்று பயன் பெறலாம் விவரங்களுக்கு 04365 252 204 என்ற எண்களில் தொடர்பு கொள்ள உதவி ஆணையர் குமார் தெரிவித்துள்ளார்.