News August 7, 2025

மக்காச்சோளம் செயல் விளக்க திடல் விண்ணப்பிக்க அழைப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி (ம) உற்பத்தியை அதிகரித்தல் திட்டத்தின் கீழ் முகையூர், காணை, வல்லம், மரக்காணம் திருவெண்ணைநல்லூர் வட்டாரங்களில் 100 ஹெக்டேர் பரப்பளவில் மானியம் பெற்று மக்காச்சோளம் செயல் விளக்க திடல் அமைக்க விவசாயிகள் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்தோ அல்லது நில ஆவணங்களுடன் தங்கள் வட்டார வேளாண் விரிவாக்க மையங்களை அணுக விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் அறிவித்துள்ளார்

Similar News

News August 7, 2025

விழுப்புரம் மாவட்டத்தில் இத்தனை சிறப்பா?

image

விழுப்புரம் மாவட்டத்தில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற செஞ்சிக் கோட்டையை தெரிந்த பலருக்கும், இங்குள்ள சிறப்பு வாய்ந்த கோயில்கள் பற்றி தெரியவில்லை. சடையப்ப வள்ளல் பிறந்த ஊரான திருவெண்ணைநல்லூரில் உள்ள சிவன் கோயில், மண்டகப்பட்டில் மகேந்திரவர்மன் உருவாக்கிய குடைவரைக் கோயில், 8,000 சமணர்கள் வாழ்ந்த எண்ணாயிரத்தில் உள்ள கோயில் என பல உண்டு. புதுப்புது இடங்களுக்கு செல்ல விரும்பும் நபர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 7, 2025

ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் ஆலோசனைக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்கம் புதிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் இன்று (ஆக.7 ) விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் திமுக மாவட்ட கழக பொருளாளர் இரா.ஜனகராஜ் , ஓய்வுபெற்ற காவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் திட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் மாணவ மாணவிகளுக்கு, சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் ‘கல்வி கடன் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, பட்டப்படிப்பு பயில்பவர்களுக்கு கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரகம், கூட்டுறவு வங்கி, மாவட்ட சிறுபான்மையின நல அலுவலர்கள் போன்ற இடங்களில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!