News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்

‘பறவை மனிதர்’ என அன்போடு அழைக்கப்பட்ட ஜோசப் சேகர் காலமானார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனது வீட்டின் மொட்டை மாடியில் இவர் அளிக்கும் உணவுக்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் குறிப்பாக கிளிகள் தேடி வரத்தொடங்கின. 20 ஆண்டுகளாக இந்த உன்னத பணியை செய்து வந்த அவர், கொரோனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கும் உணவு அளித்து மக்களின் நாயகன் ஆனார். ஜோசப் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP
Similar News
News December 15, 2025
சற்றுமுன்: பொங்கலுக்கு ₹5000.. வெளியான முக்கிய தகவல்

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில், CM ஸ்டாலின் சொன்னதுபோல் மகளிர் உரிமைத் தொகையும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. அதன்படி, பொங்கலுக்கு முன்னதாக (12-ம் தேதி) மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு நடக்கிறது. இந்நிலையில் பொங்கல் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3000, மகளிர் உரிமைத் தொகை ₹2000 என மொத்தம் ₹5000 வழங்கப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News December 15, 2025
காலையில் Ghee Coffee குடிக்கலாமா?

டயட் உணவுகளில் டிரெண்டிங்கில் இருக்கும் ஒன்று Ghee Coffee. இது உண்மையிலே நல்லதா என கேட்டால், ஆம் என்கின்றனர் டாக்டர்கள். *பால் சேர்க்காமல், சுடு தண்ணீரில் காபி பவுடர், நெய் சேர்த்து குடிக்கும்போது, நீண்ட நேரம் உடலுக்கு ஆற்றலை தருகிறது. *நெய்யில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு மூளைக்கு எரிபொருளாகி மன தெளிவை அதிகரிக்கிறது *குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது *பசியை குறைத்து, எடையை கட்டுப்படுத்துகிறது.
News December 15, 2025
பெரியாரை அவமானப்படுத்திய திமுக: நாஞ்சில் சம்பத்

திமுகவில் கூடும் இளைஞர்களின் கூட்டம் ₹1000-க்காக வந்தவர்கள் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார். தவெகவில் இருக்கும் இளைஞர்கள் விஜய்க்காக உயிரை தர தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உதயநிதியை இளம்பெரியார் என திமுகவினர் கூறியதன் மூலம், பெரியாரை அவர்கள் அவமானப்படுத்தியுள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருக்கும் பாதிபேர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.


