News January 28, 2026
மக்கள் தலைவராக இருந்தவர் அஜித் பவார்: மோடி இரங்கல்

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா DCM அஜித் பவாருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மக்கள் தலைவராக இருந்த அஜித் பவார் சமூகத்தின் அடிமட்டம் வரை தொடர்பில் இருந்தவர் எனவும் கூறியுள்ளார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் அளப்பரியது என குறிப்பிட்ட மோடி, அவரை இழந்து வாழும் குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.
Similar News
News January 29, 2026
போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் Ex CM-க்கு நோட்டீஸ்

தெலங்கானாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போன்கள் ஒட்டுக்கேட்பு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. இதில், ஏற்கெனவே Ex-CM சந்திரசேகர ராவின் மகன் KTR-டம் 8 மணிநேரம் SIT கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில் சந்திரசேகர ராவிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நிதி பெற்றது பற்றியும் நாளை அவரிடம் விசாரிக்கப்படவுள்ளது.
News January 29, 2026
இன்று மட்டும் ஒரு கிராம் தங்கம் ₹1,190 உயர்வு.. அதிர்ச்சி

தங்கம் விலை இன்று (ஜன.29) ஒரே நாளில் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. இதனால் சவரனுக்கு ₹9,520 அதிகரித்துள்ளதால், ஏற்கெனவே ஆபரணங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இன்று வாங்க திட்டமிட்டுள்ளோர் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். காரணம், இன்றைய விலைக்கே ஆர்டர் செய்த நகையை வாங்க வேண்டும் என்பது தான். இந்த விலையேற்றம், வரும் நாள்களில் குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
News January 29, 2026
ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேர் விடுவிப்பு

2017-ம் ஆண்டு அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் 57 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. அப்போதைய முதல்வர் EPS, ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்திருந்தாலும், CBCID பதிவு செய்த வழக்குகள் மட்டும் ரத்தாகாமல் இருந்தது. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் இருந்து 57 பேரையும் விடுவித்து மதுரை HC உத்தரவிட்டுள்ளது.


