News October 14, 2024

மக்கள் குறை தீர்வு கூட்டம் ரத்து – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வானிலை ஆய்வு மையம் புதுச்சேரிக்கு நாளை 15ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நாளை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News September 14, 2025

புதுவை: போக்சோ வழக்கில் முதியவர் கைது

image

புதுவை, மேட்டுப்பாளையத்தில் 11 வயது சிறுமி நேற்று முன்தினம் டியூஷனில் படித்து விட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதியவர் ஒருவர், சிறுமியை அருகில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். பின் சிறுமியிடம் அவரது பெற்றோர் விசாரித்தபோது, அந்நபர் அதேபகுதியை சேர்ந்த புஷ்பநாதன் என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News September 14, 2025

புதுவை: டிரைவர்களுக்கு போக்குவரத்து எஸ்பி எச்சரிக்கை

image

புதுச்சேரி வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீசார்- ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று(செப்.13) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு போக்குவரத்து சீனியர் எஸ்பி நித்யா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அப்போது, ஆட்டோக்களுக்கான உரிய ஆவணங்களை சரியான முறையில் வைத்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்தார்.

News September 14, 2025

புதுவையில் ஆசிரியர் தற்கொலை; போலீசார் விசாரணை

image

புதுவை மாநிலம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வி. தனியார் பள்ளி ஆசிரியரான இவருக்கு, 2 ஆண்டிற்கு முன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்நிலையில், மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு காலதாமதம் செய்ததால், விரக்தியடைந்த அவர் விசம் குடித்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!