News June 23, 2024

மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெறாது

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜூன் 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. எனவே நாளை 24ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது. அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி வருவாய் அலுவலரிடம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மனுக்களை கொடுத்து மக்கள் பயன்பெறலாம் என்று ஆட்சியர் வளர்மதி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News August 31, 2025

ராணிப்பேட்டை: மின்சார பிரச்சினையா இதை பண்ணுங்க

image

ராணிப்பேட்டை:மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக்<<>> செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

ராணிப்பேட்டை: பெண் குழந்தை இருக்கா.. ரூ.50,000

image

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ▶️ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. ▶️2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. ▶️இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். ▶️இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17569927>>(தொடர்ச்சி)<<>>

News August 31, 2025

பெண் குழந்தை இருக்கா? (2/2)

image

இத்திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் 1 பெண் குழந்தை (அ) 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். (SHARE)

error: Content is protected !!