News September 22, 2025

மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் உத்தரவு!

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (22.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் க. சிவ சௌந்தரவல்லி பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாகத் தீர்வு காண உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News

News September 22, 2025

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் மூன்றாம் கட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடக்கிறது. திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி, மற்றும் மாதனூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணிக்கு இந்த முகாம் நடைபெறும். பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

News September 22, 2025

மாவட்ட அளவில் சாதனை படைத்த திருப்பத்தூர் மாணவி

image

வேலூர் மாவட்டம், காட்பாடி விஐடி கல்லூரியில் நேற்று மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 11 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டனர். அதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அமுத ஜீவன் மகள் கனிஷ்கா முதலிடம் பிடித்து தங்கம் வென்றுள்ளார்.

News September 22, 2025

திருப்பத்தூர்: பெண்களுக்கு செம்ம வாய்ப்பு – வங்கி கடன் திட்டம்!

image

திருப்பத்தூர் மாவட்ட பெண்களே! பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள்? உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 லட்சம் முதல் கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இது குறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!