News February 25, 2025
மக்கள் குறைதீா் கூட்டத்தில் 633 மனுக்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பிப்ரவரி 24 பொது மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் கல்வி உதவித் தொகை முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 633 மனுக்களை அளித்தனர் மனுக்களை பெற்ற ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Similar News
News September 24, 2025
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் ஆய்வு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் காலாண்டு தணிக்கை ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வு, இன்று (செப்டம்பர் 23, 2025) மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு நடந்தது.
News September 23, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 23 அன்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. தவெக, காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.