News September 8, 2025

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்

Similar News

News September 8, 2025

BIG BREAKING: காஞ்சிபுரம் டி.எஸ்.பி தப்பியோட்டம்!

image

காஞ்சிபுரம் மாவட்ட உட்கோட்ட துணை கண்காணிப்பாளராக உள்ள சங்கர் கணேஷ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வந்த புகாரின்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இவர் சீருடையுடனே நீதிபதி காரில் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் பாதி வழியில் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

News September 8, 2025

BREAKING: காஞ்சிபுரத்தில் டி.எஸ்.பி கைது!

image

காஞ்சிபுரம் மாவட்ட உட்கோட்ட துணை கண்காணிப்பாளராக சங்கர் கணேஷ் பணியாற்றி வருகிறார். இவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வந்த புகாரின்மீது கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, அவரை கைது செய்ய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவரை செப்.,22ம் தேதி வரை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். காவலர் சீருடையுடனே இவர் இன்று (செப்.,8) கைது செய்யப்பட்டார். <<17650505>>தொடர்ச்சி<<>>

News September 8, 2025

காஞ்சிபுரம்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

காஞ்சிபுரம் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!