News September 1, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 362 மனுக்கள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.01) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 362 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 4, 2025

பெரம்பலூரில் பயங்கர தீ விபத்து

image

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் ஆயில் மில்லில் இன்று (செப்.04) காலை மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதாரமானது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் மற்றும் மின்சாரத் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தீவிபத்தால், அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

News September 4, 2025

பெரம்பலூர்: டாஸ்மாக் கடைகள் நாளை மூடல்

image

நாளை (செப்.05) மிலாடி நபி தினத்தையொட்டி, அரசு டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனை இல்லாத உலர் நாளாக தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சில்லறை விற்பனை கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் முழுவதுமாக நாளை ஒரு நாள் மூடிடவும், அரசின் விதிமுறைகளை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது எனவும் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருனாளினி அறிவித்துள்ளார்.

News September 4, 2025

பெரம்பலூர்: மக்களே முற்றிலும் இலவசம்! Don’t Miss It

image

பெரம்பலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும் அல்லது உங்கள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பதிவு செய்து பயன் பெறலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!