News January 6, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 213 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
Similar News
News February 5, 2026
திண்டுக்கல்: விரைவில் பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலகத்திற்கு சென்று பாஸ்போர்ட் பெற்று வந்தனர். பின்னர் கொடைரோடு தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட தலைநகருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் கொண்டுவர வேண்டும் என்று பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அலுவலகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
News February 5, 2026
வத்தலகுண்டு அருகே வசமாக சிக்கிய 3 பேர்! அதிரடி

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சுபாஷ் (40), ஜோதி (43) மற்றும் மனோஜ் குமார் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News February 5, 2026
திண்டுக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


