News July 16, 2024
மக்கள் எங்களை கோட்டைக்கு அனுப்பாமல் விட்டனர்

பாமகவை கோட்டைக்கு அனுப்பாமல் மக்கள் தவறி விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் பாமகவின் பின்னால் மக்கள் முழுவதுமாக வர மறுத்து தயங்குகின்றனர். அது ஏனோ தெரியவில்லை, மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் செய்தாலும் தேர்தல் நேரத்தில் நாணயமான வித்தியாசமான பாமக மக்கள் கைவிடுகின்றனர்” என்றார்.
Similar News
News August 25, 2025
விழுப்புரம்: ஆன்லைன் மோசடி, மக்களே உஷார்!

அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் வரும் ஆன்லைன் வர்த்தகம், கடன், கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு புதுப்பித்தல் போன்றவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பணம் இழந்தால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News August 25, 2025
தெரு நாய்களை பிடிக்கும் பணி துவக்கம்

திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் அதிக அளவில் தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் சுற்றி வருவது பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்துலை ஏற்படுத்தி வந்தது.இதை தொடர்ந்து நகராட்சி சார்பில் அதே பகுதியில் தனியார் ஆட்கள் மூலம் தெரு நாய்களை வலைபோட்டு பிடிக்கும் நடவடிக்கை,சுகாதார அதிகாரி செந்தில் மேற்பார்வையில் நடந்தது. நேற்று மட்டும் 25 நாய்கள் பிடிக்கப்பட்டதாக நகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
News August 25, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.