News November 23, 2025

மக்களை சந்திக்க புறப்பட்டார் விஜய்

image

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக தவெக தலைவர் விஜய், நீலாங்கரை இல்லத்தில் இருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். விஜய் வருகையையொட்டி, தவெக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குழுவினர், பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், QR கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே, நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் ஜேப்பியார் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

Similar News

News February 10, 2026

சுகாதார வளாகத்தை திறந்து வைத்த வட்டார வளர்ச்சி அலுவலர்

image

கந்திலி ஒன்றியம் பெரிய கரம் ஊராட்சி அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளியில் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மக்கள் நல சங்கம் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி மனு அளித்தார். அதன் பேரில் இன்று (பிப். 10) கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பெரியகரம் ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திறக்கப்பட்டது.

News February 10, 2026

மகன் திருமணம்.. மோடியை சந்தித்த சச்சின்

image

சச்சின் தனது மகனின் திருமணத்திற்கு PM மோடியை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். அர்ஜுன் – சானியா திருமணம் மார்ச் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக PM-ஐ அழைப்பதில் பெருமைப்படுகிறேன் என்று சந்திப்பு போட்டோக்களை X தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், திருமண ஜோடியை ஆசீர்வதித்து, மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கியதற்கு PM-க்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News February 10, 2026

நடிகை பத்மா காலமானார்.. உருக்கமான PHOTOS

image

சின்னத்திரை ரசிகர்களை தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டிய <<19060131>>நடிகை பத்மா(48)<<>>, இந்த பூவுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். இறுதி காலத்தில் புற்றுநோய்க்கு எதிராக போராடிய அவர், சிகிச்சைக்கு பணமின்றி வறுமையில் வாடியது பெரும் சோகம். பத்மாவின் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, ரசிகர்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது போட்டோக்களை மேலே கொடுத்துள்ளோம். கடைசி போட்டோ உங்களை அழ வைக்கலாம்!

error: Content is protected !!