News March 28, 2025
மக்களே உஷார்-யாரும் வெளியே வராதீங்க!

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுச்சேரி, காரைக்காலில் 98 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
Similar News
News March 31, 2025
புதுவை பல்கலைக்கழகத்தில் வேலை

புதுவை பல்கலைக்கழகமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு நிரப்ப உள்ளதாகவும், 04.04.2025ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும், இது குறித்த மேலும் தகவலுக்கு பல்கலைக்கழகத்தை தொடர்ப்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News March 31, 2025
இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி பெண் ஏமாற்றம்!

வில்லியனுாரைச் சேர்ந்த அக்ஷயா, இன்ஸ்டாகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு தொடர்பான விளம்பரத்தை பார்த்து, அதிலிருந்த வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் பேசிய மர்மநபர் பகுதி நேர வேலைக்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அவர், 95 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாற்றம் அடைந்ததாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
News March 31, 2025
புதுச்சேரி ஆளுநர் ரமலான் வாழ்த்துச் செய்தி

புனித ரமலான் நோன்பு சமுதாயத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ, உணர்வு வளரவும், எளிமை, அன்பு ஆகிய பண்புகளோடு அனைவரையும் நேசிக்கவும் வழிகாட்டுகிறது.ரமலான் நோன்பின் பயனாக அனைவரது வாழ்விலும் அமைதியும் மகிழ்ச்சியும் இறைவன் அருள் புரியட்டும் என புதுவையில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும அனைவருக்கும் ஆளுநர் மனமார்ந்த தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.