News March 28, 2025

மக்களே உஷார்..சேலத்தில் அரங்கேறும் புதிய மோசடி!

image

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில், வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கைப்பேசியில் யாரேனும் தொடர்பு கொண்டு தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.அதற்கு குறிப்பிட்ட தொகையை அனுப்புங்கள் என சொன்னாலும், Google Pay பின் நம்பர் போன்ற எதையும் சொல்லக்கூடாது என வலியுறுத்தினர். சைபர் கிரைம் புகார்களுக்கு அழையுங்கள் 1930. இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து மோசடியிலிருந்து விழிப்புணர்வுடன் இருங்கள்.

Similar News

News March 31, 2025

சேலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தேதி அறிவிப்பு

image

சேலம்: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அரசு அனுமதி பெற்று வரும் ஏப்.5ல் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ( SHARE பண்ணுங்க)

News March 30, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (30.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News March 30, 2025

சேலம் மாவட்டத்தில் இன்று பதிவான வெப்பநிலை

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக வெப்பநிலை சதத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 30) சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் இன்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலால் முதியவர்கள் கடும் சிரம்மமடைந்துள்ளனர்.

error: Content is protected !!