News August 7, 2024
மக்களுடன் முதல்வர் முகாமில் பங்கேற்க அழைப்பு

குத்தாலம் வட்டாரத்தில் கங்காதாரபுரம், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி, மாந்தை ஆகிய கிராம பஞ்சாயத்துகளை உள்ளடக்கி ஸ்ரீகண்டபுரம் காரனுர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News August 10, 2025
தஞ்சை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) யில் 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ₹15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
அடிப்படை வசதிகள் செய்து தர அறிவுறுத்தல்

பூம்புகார் வன்னியர் சங்க மகளிர் மாநாடு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இரட்டை அடுக்கு தடுப்புகள் அமைத்தல்,மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளது.
News August 10, 2025
மகளிர் மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்ட டாக்டர் ராமதாஸ்

மயிலாடுதுறை, சீர்காழி அருகே பூம்புகாரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மகளிர் மாநாடு இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்காக பூம்புகாரில் மிகப்பெரிய பந்தல் , பார்வையாளர்கள் அமர இருக்கைகள், சுகாதார வசதிகள் போன்றவற்றின் இறுதிக்கட்ட பணிகள் நேற்று இரவு நிறைவடைந்த நிலையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் நேற்று இரவு பூம்புகார் வருகை தந்து ஏற்பாடுகளை பார்வையிட்டார்.