News August 1, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் துவக்கி வைத்த ஆட்சியர்

image

கரூர், கடவூர் வட்டாரத்திற்குட்பட்ட தரகம்பட்டி சமுதாயக்கூடத்தில் இன்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் துவங்கி வைத்து நேரில் பார்வையிட்டார். பிறகு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டார். உடன் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்  சிவகாமசுந்தரி மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Similar News

News August 21, 2025

கரூர்: ரூ.76,380 சம்பளம்: கூட்டுறவு சங்கத்தில் வேலை !

image

கரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 30 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.

News August 21, 2025

கரூர்: சிலிண்டர் புக்கிங் இந்த ஒரு மெசேஜ் போதும்!

image

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!

News August 21, 2025

கரூரில் இன்று முற்றிலும் இலவசம்!

image

கரூர் அருகே, பண்டுதகாரன் புதுாரில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இன்று காலை, 10:30 மணிக்கு முயல் வளர்ப்பு குறித்த, இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. அதில் பல்வேறு தலைப்புகளில் பல்கலை கழக பேரா சிரியர்களால் பயிற்சி முகாம் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 04324-294335, 73390-57073 எண்களில் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!