News July 29, 2024
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் குறித்து நியமன அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் இருந்தனர்.
Similar News
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 1/2

மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04146-222470) தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. <<17016119>>தொடர்ச்சி<<>>
News July 10, 2025
கலைஞர் கனவு இல்லம் திட்டம் 2/2

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர சொந்தமாக 350 ச.அடி நிலமும், பட்டாவும் இருக்க வேண்டும். சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது. குடிசை வீடு எனில் ஒரு பகுதி ஓடு/ கான்கீரிட்டாக இருக்க கூடாது. கிராமப்புறத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். அந்த நிலத்தை வணிக நோக்கில் பயன்படுத்தி வந்தால், விண்ணப்பிக்க இயலாது. *சொந்த வீடு கனவை நனவாக்கும் சூப்பர் திட்டம் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க. அப்டியே ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
ஊராட்சிக்கு விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில். தமிழக அரசு தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதோடு, தலா ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகள் சமூக ஊராட்சி விருதுக்கு வரும் 14ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை ஒப்படைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.