News July 6, 2024
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் கலெக்டர் அழைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் ஜூலை 11 முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை 251 ஊராட்சிகளில் 70 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தெரிவித்துள்ளார். மக்களுடன் முகாமை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் தருமபுரி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 20, 2025
தர்மபுரியில் திருமணத்திற்கு அரசு தரும் 4 கிராம் தங்கம்

தர்மபுரியில் வரும் 14.09.2025 அன்று 18 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதில் 4 கிராம் தங்கம், ஆடை, மாலை, மெத்தை, பீரோ, கட்டில், தலையணை, பாய், கை கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருட்கள், பாத்திரங்கள், மணமக்கள் வீட்டினர், 20 பேருக்கு அறுசுவை விருந்து உள்ளிட்டவை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
News August 20, 2025
தருமபுரி இளைஞர்களுக்கு விமான படையில் வேலை

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்களுக்கு இந்திய விமான படையில் அக்னிவீர் (வாயு) (OS) பணிக்கு ஆட்சேர்ப்பு , தாம்பரம் விமானப்படை வளாகத்தில் செப்டம்பர் 2 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 1, 2025 அன்று நிலவரப்படி, 17 முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
ஒகேனக்கல் ஆற்றில் 1,45,000 கன அடி தண்ணீர் வத்து

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1,45,000 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவியில் குளிப்பதற்கு நேற்று இரண்டாவது நாளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.