News July 11, 2024
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 450 மனுக்கள்

கோத்தகிரியில் உள்ள கீழ்கோத்தகிரி ஐயப்பன் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் மனைப்பட்டா, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு கொடுக்கப்பட்ட 450 மனுக்கள் ஒவ்வொரு துறையாக கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்து பிரித்து அனுப்பும் பணிகளை அமைச்சர் கே. ராமச்சந்திரன் பார்வையிட்டார். இதில் மாவட்ட ஆட்சியர் அருணா உடன் இருந்தார்.
Similar News
News August 16, 2025
நீலகிரி: அரசுப் பேருந்தில் Luggage-ஐ மறந்துவிட்டீர்களா?

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (ஷேர் பண்ணுங்க)
News August 16, 2025
நீலகிரி நகரமன்ற தலைவர்: அமைச்சரிடம் கோரிக்கை மனு

நீலகிரி, குன்னுார் நகர மன்ற தலைவர் சுசிலா திருச்சியில் உள்ள நகர்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில் நேரில் சென்று நேர்முக உதவியாளர் மணிகண்டன் சந்தித்து குன்னூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடுப்புச் சுவர், நடைபாதைகள் மற்றும் அனைத்து பணிகள் செய்து தர கோரிக்கை மனு அளித்தார்.
News August 16, 2025
நீலகிரி: ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

நீலகிரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Any டிகிரி போதுமானது, சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 27.08.2025 தேதிக்குள் <