News February 18, 2026

மக்களுக்கு 5 பைசாவுக்கு கூட உதவாத பட்ஜெட்: தவெக

image

தமிழகத்துக்கு எந்த நலனையும் திமுக செய்யவில்லை என்பது இடைக்கால பட்ஜெட்டின் மூலம் தெரிவதாக CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக அரசின் பட்ஜெட் போன்று இல்லை, திமுகவின் குடும்ப பட்ஜெட் மாதிரி இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வளர்ச்சிக்காக எதுவும் இல்லை எனவும், ஒட்டுமொத்தமாக TN மக்களுக்கு 5 பைசாவுக்கு கூட இந்த பட்ஜெட் உதவாது எனவும் சாடியுள்ளார்.

Similar News

News February 21, 2026

₹1,020 கோடி ஊழல் வழக்கில் வருண் IPS பெயர்!

image

<<19190599>>KN நேரு மீது வழக்குப்பதிவு<<>> செய்ய சென்னை HC உத்தரவிட்டதை அடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடை கொள்முதல் ஒப்பந்தத்தை இடைத்தரகரிடம் பேசி மனோஜ்குமார் என்பவருக்கு வருண் IPS பெற்றுக்கொடுத்ததாக TN டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில் ED குறிப்பிட்டுள்ளது. 3-வது நபரிடம் ரகசிய தகவல்களை வருண் பகிர்ந்ததாகவும் ED குற்றஞ்சாட்டியுள்ளது.

News February 21, 2026

FLASH: தங்கம் விலையில் தடாலடி மாற்றம்

image

இந்த வார கோல்டு மார்க்கெட், ஏற்ற இறக்கத்துடன் தடாலடி மாற்றங்களை சந்தித்துள்ளது. இந்த வார வர்த்தக முடிவில், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹14,680-க்கும், 1 சவரன் ₹1,17,440-க்கும் விற்கப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தைவிட ₹960 அதிகம். அதேபோல், வெள்ளி விலை முந்தைய வாரத்தைவிட கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹2.90 லட்சத்திற்கு விற்பனையாகிறது.

News February 21, 2026

‘திமுக கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்துவிட்டார்’.. வைகோ

image

ஸ்டாலினை நேரில் சந்தித்து சிறப்பான ஆட்சி செய்ததாக கூறி வாழ்த்து தெரிவித்ததுடன், மீண்டும் திமுக ஆட்சியமைக்கும் என OPS பேசியதுதான் அரசியலில் ஹாட் டாப்பிக். இதனால், அவர் திமுக கூட்டணியில் இணைவாரா (அ) திமுகவிலேயே இணைவாரா என யூகங்கள் எழுந்தன. இதுகுறித்து பேசிய வைகோ, ‘எதையும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுக்கக்கூடிய OPS, ஸ்டாலினை சந்தித்ததன் மூலம் நேற்றே அவர் கூட்டணிக்கு வந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!