News March 19, 2024
மக்களுக்கு மாவட்ட காவல்துறை வேண்டுகோள்

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை இன்று (மார்ச் 19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள் வழியாகவோ, சமூக ஊடகங்கள் வழியாகவோ பகிரப்பட்டால் மாவட்ட காவல்துறையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 9498101765 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News October 30, 2025
நெல்லை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News October 30, 2025
நெல்லை: சினிமாவை மிஞ்சும் நூதன கொள்ளை

பேட்டை MGP பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காதர் பீவி என்பவர் வீட்டிற்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் மகளிர் உதவித்தொகைக்கு கணக்கெடுப்பு நடப்பதாக கூறி விஏஓ அலுவலகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கே கழுத்தில் உள்ள செயினை கழற்றி தன்னிடம் தந்துவிட்டு விசாரணைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி காதர் பீவி செய்துள்ளார். பின்னர் அந்த பெண் செயினுடன் தலைமறைவாகி விட்டார். புகாரின் பேரில் பேட்டை போலீசார் விசாரணை.
News October 30, 2025
நெல்லை: G Pay / PhonePe பயன்படுத்துகிறீர்களா?

நெல்லை மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க


