News May 31, 2024

மக்களுக்காக மோடி தவம் செய்கிறார்: தமிழிசை

image

மோடியின் தியானம் குறித்து முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தவம் ஓர் ஆன்மீக கலை. அதை உணர்வதற்கும், உணர்த்துவதற்கும் பிரதமர் மோடி குமரியை தேர்ந்தெடுத்ததற்கு பெருமை கொள்ள வேண்டும். நாட்டின் நலனுக்காக தியானம் செய்வதை தேர்தல் விதிமீறல் என எதிரணியினர் கூறுவது காழ்ப்புணர்ச்சி. மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி தவம் செய்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News

News August 22, 2025

திடீரென ஸ்தம்பித்த GST சாலை

image

சென்னை, பல்லாவரம் மேம்பாலத் தடுப்புகளில் கல்லூரி பேருந்து மோதியதால் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல்லாவரம் மேம்பாலம் தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு, பல்லாவரத்தில் இருந்து விமான நிலையம் செல்லும் மார்க்கத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் தாம்பரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழே மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

News August 22, 2025

BREAKING: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

சென்னையில் இன்று (ஆக.22) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கு மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமான என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் வழக்கம் போல் இயக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News August 22, 2025

வந்தாரை வாழ வைக்கும் நம்ம சென்னை!

image

மதராஸ் பட்டணமாக 386 ஆண்டுகளுக்கு முன்பு 1639-ம் ஆண்டு இதே நாளில் (ஆக.22) சென்னை தோற்றுவிக்கப்பட்டது. வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அப்பெருமைக்கு சொந்தம் கொண்டாடுவதில் சென்னைக்கு முக்கிய பங்கு உண்டு. மதராஸ் பட்டணம், சென்னப் பட்டணம், மெட்ராஸ் என ஒவ்வொரு பெயர்கள் மாறினாலும், இன்று வரை சென்னை என்ற பெயருடன் நவீன இந்தியாவின் அடையாளமாக காட்சி அளிக்கிறது. சென்னையில் உங்களுக்கு பிடித்ததை கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!