News October 14, 2024

மக்களிடம் 172 மனுக்களை பெற்ற கலெக்டர்

image

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 172 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவுறுத்தினார். உடன் அரசு அலுவலர்கள் பலர் இருந்தனர்.

Similar News

News August 12, 2025

திண்டுக்கல்: இலவச தையல் மெஷின் வேண்டுமா ? FREE

image

திண்டுக்கல் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை<> இங்கே கிளிக் <<>>செய்து அரசு இணையதளம் வாயிலாக அறியலாம். உதவும் உள்ளம் கொண்ட திண்டுக்கல் மக்களே SHARE பண்ணுங்க!

News August 12, 2025

பேருந்து மோதி விபத்து – வாலிபர் பலி!

image

வடமதுரையை அடுத்த வெள்ளைபொம்மன்பட்டி பிரிவு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளபொம்மன் பட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் படுகாயம் அடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 12, 2025

திண்டுக்கல்: மாதம் ரூ.2,000 பெறக்கூடிய SUPER திட்டம்!

image

திண்டுக்கல்லில் அரசு சார்பில் அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின்கீழ் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை, கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு <>கிளிக்<<>> பண்ணுங்க! SHAREIT

error: Content is protected !!