News June 7, 2024
மக்களிடம் குறைகளை கேட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ

ஸ்ரீரங்கம் தொகுதி சோமரசன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ இல்லத்தில் நேற்று பொதுமக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளித்து எம்எல்ஏவிடம் நிறைவேற்றி தரக் கோரிக்கை வைத்திருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட எம்எல்ஏ பழனியாண்டி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
Similar News
News September 14, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலம், உரிய ஆவணங்களுடன் வரும் அக்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்திலிருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் நபர்கள் இந்திய அரசின் <
News September 13, 2025
திருச்சி: ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஜெர்மனியில் வேலை

ஜெர்மனி நாட்டில் வேலைவாய்ப்பை பெறும் வகையில், ஜெர்மன் மொழி தேர்விற்கான இலவச பயிற்சி தாட்கோ சார்பில் அளிக்கப்படுகிறது. இதற்கு Nursing / B.E / B.Tech முடித்த, 35 வயதுக்கு உட்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்புகளை சேர்ந்த நபர்கள், <