News January 29, 2026
மகா., DCM ஆகிறாரா அஜித் பவார் மனைவி?

அஜித் பவார் மறைவைத் தொடர்ந்து அவரது மனைவி சுனேத்ரா பவாரை மகாராஷ்டிர DCM-ஆக நியமிக்க NCP திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்கெனவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அஜித் பவாரின் மறைவால் காலியாக உள்ள பாராமதி தொகுதியில் அவரது மனைவி போட்டியிட வாய்ப்புள்ளது. மேலும், கட்சித் தலைவராக பிரஃபுல் படேல் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News February 17, 2026
FLASH: இனி மாதம் ₹5,000.. பட்ஜெட்டில் அறிவிப்பு

இடைக்கால பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. உலமாக்களின் மாதாந்திர உதவித்தொகை ₹3,000-ல் இருந்து ₹5,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும், கடந்த 5 ஆண்டுகளில் சிறுபான்மையின மாணவர்கள் 90,733 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
News February 17, 2026
வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்கவை இதோ..!

*தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் போடப்பட்டு ₹1,94,076 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. *பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக, விவசாயிகளுக்கு இதுவரை ₹2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. *விவசாயிகளிடம் இருந்து 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. *2 லட்சம் புதிய இலவச மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
News February 17, 2026
மகா சிவராத்திரியில் நடந்த சோகம்!

குஜராத்தில் மகா சிவராத்திரி ஊர்வலத்தில் நடந்த ஸ்டண்டின்போது பக்தர் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி ஸ்டண்டில் ஈடுபட்டபோது, அவர் அருகில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ராமன்பாய் ரத்தோட் என்பவர் மீது தீ பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


