News February 14, 2026
மகா சிவராத்திரி விரதம்.. இவர்களெல்லாம் தவிர்க்கவும்!

மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. ஆனால், விரதம் இருப்பது அனைவருக்கும் ஆரோக்கியமானதல்ல என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக நீரிழிவு & இதய நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் விரதத்தை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடல்நல காரணங்களால் விரதத்தை கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் சிவன் அருளை பெற முடியும் என்று நம்புங்கள்!
Similar News
News February 20, 2026
தோல்வி பயத்தால் தேமுதிகவை திமுக இணைத்ததா? உதயநிதி

தோல்வி பயத்தால் திமுக, தேமுதிகவை கூட்டணியில் சேர்ந்துள்ளதாக எழும் விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது கூடுதல் பலம் மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார். அதேசமயம், தேமுதிக இந்த பக்கம் வந்ததால் அதிமுக கூட்டணியின் பலம் குறையும் என்றும், இன்னும் 50 நாள்களில் அந்த உண்மை தெரியவரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News February 20, 2026
SPORTS 360°: ISL முதல் போட்டியில் சென்னை தோல்வி’

▶10 ஆண்டுகளுக்கு பின் ரஞ்சி டிராபி இறுதி போட்டிக்கு கர்நாடகா முன்னேறியது. ▶ ஐடிஎப் மகளிர் ஓபன் டபிள்யூ 100 டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் காலிறுதிக்கு முன்னேறினார். ▶12-வது ISL கால்பந்து தொடரின் முதல் போட்டியிலேயே சென்னை அணி மும்பையிடம் தோல்வியடைந்தது. ▶டி20 உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஓமன் இன்று எதிர்கொள்கிறது.
News February 20, 2026
வரலாற்றில் இன்று

1986 – நடிகர் கலையரசன் பிறந்ததினம்.
1987- அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில அந்தஸ்தை பெற்றன.
1990 – நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பிறந்தநாள்.
2003 – அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர்.
2011 – பாடகர் மலேசியா வாசுதேவன் மறைந்த நாள்.


