News April 8, 2025

மகாவீர் ஜெயந்தி: இறைச்சி கடைகள் மூடல்

image

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் பெரம்பூர், வில்லிவாக்கம், கள்ளிக்குப்பம் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய 4 இறைச்சிக் கூடங்களும் வருகிற 10ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. ஆகவே, இறைச்சிக் கூட வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்க

Similar News

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

சென்னையில், 308 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25 – 35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News April 17, 2025

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (ஏப்ரல் 17) வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, பணிக்கு செல்வோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. வேலைக்கு செல்வோருக்கு ஷேர் செய்யுங்க.

News April 17, 2025

10 ஆண்டுகளுக்கு பிறகு 100 மி.மீ. மழை

image

சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதிதான் 100 மி.மீ. மழை பெய்தது. அதைத் தொடர்ந்து, தற்போது 10 ஆண்டுகள் கழித்து நேற்று (ஏப்16) பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சென்னை உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

error: Content is protected !!