News April 5, 2025
மகாவீர் ஜெயந்தியன்று மதுபானக் கடைகள் மூட உத்தரவு

காஞ்சிபுரத்தில், வரும் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இது, தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1989 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மேற்கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 5, 2025
பேருந்தில் ஊர் பெயர், எண் பதிக்க கோரிக்கை

அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளின் பின்பக்கம் உள்ள தடம் எண் மற்றும் ஊர் பெயர் பலகையை, பணிமனை ஊழியர்கள் முறையாக பராமரிக்கவில்லை எனப்படுகிறது. எனவே, தடம் எண் மற்றும் ஊரின் பெயர் பலகையில் உள்ள எழுத்துக்களை சரியாக எழுத கோரிக்கை எழுந்துள்ளது.
News April 5, 2025
லைன் ஆபரேட்டர் வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜ் எண்டர்பிரைசஸ் கம்பெனியில் லைன் ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 10, 12, ITI, டிப்ளமே படித்த 18 – 25 வயது உடையவர்கள் வரும் மே 3ஆஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.15,000 – ரூ.25,000 வழங்கப்படும். உணவு, போக்குவரத்து ஊக்கத்தொகை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை <
News April 5, 2025
படப்பையில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தாம்பரம் அடுத்த படப்பையில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் இன்று (ஏப்ரல் 5) கைது செய்தனர். கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க, சம்பவ இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சதாம் உசேன், பிரவீன் குமார், இம்ரான்கான் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். கஞ்சா வாங்கினால் போதை மாத்திரை இலவசம் என சலுகை முறையில் விற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.