News September 6, 2024
மகாவிஷ்ணு மீது சைதாப்பேட்டை போலீசில் புகார்

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு முன் ஜென்மத்தில் செய்த பாவங்களுக்காகத்தான் மாற்று திறனாளிகளாகவும், குற்றவாளிகளாகவும் பிறந்ததாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மகா விஷ்ணுவை கைது செய்ய புகார் அளித்துள்ளனர்.
Similar News
News September 16, 2025
பிரான்ஸ் மாகாணத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பிரான்ஸ் நாட்டின் வால் டி லாயர் மாகாணத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. கலாச்சார பரிமாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று
கையெழுத்திடப்பட்டது. சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
News September 16, 2025
சென்னையில் இனி குடிநீர் பிரச்சனை இருக்காது…

2050-ஆம் ஆண்டுக்குள் சென்னைக்கு தற்போது இருப்பதை விட மூன்று மடங்கு குடிநீர் தேவைப்படும். இதற்காக நீர் வளத்துறை (WRD) ஒரு பெரிய திட்டம் செயல்படுத்த உள்ளது. அதன்படி ஏரிகள், குளங்களை சரி செய்யவும், புதிய நீர்த்தேக்கங்கள் கட்டவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் ரூ.14,000 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டம் சென்னையின் தண்ணீர் தேவையை சமாளிக்க உதவும். ஷேர் பண்ணுங்க
News September 16, 2025
சென்னை சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, சென்னை கமிஷனர்- 044-23452320, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள்