News January 11, 2026
மகாராஷ்டிராவில் இணையும் பவார்கள்

தேர்தல் அரசியலை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கூட்டணியில் இணைவதும், பிரிவதும் வழக்கமான ஒன்றுதான். அதுதான் விரைவில் மகாராஷ்டிராவிலும் நிகழப்போகிறது. சமீபத்தில் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே இணைந்தனர். அதுபோலதான் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சியும் ஜன.15-ம் தேதி நடக்கவிருக்கும் புனே, பிம்ப்ரி சின்ச்வாட் மாநகராட்சி தேர்தலில் கைகோர்த்துள்ளன.
Similar News
News January 30, 2026
குழந்தைகள் போனை தூரம் வைக்க இத பண்ணுங்க!

குழந்தைகள் பலரும் இளம் வயதிலேயே போனுக்கு அடிமையாகி வருகின்றனர். இப்பழக்கத்தை கைவிட, இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துங்க ✦பெற்றோர்கள் குழந்தைகளுக்கு முன், போன் உபயோகத்தை குறையுங்க. பெற்றோர் செய்வதைத்தான் பிள்ளைகள் பின்பற்றுவார்கள் ✦குழந்தைகளை வீட்டுக்குள் கட்டிப்போட வேண்டாம். ஏரியாவில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் வெளியில் சென்று விளையாடுவதை ஊக்குவியுங்கள் ✦ஏதாவது கலைத் திறனில் அவர்களை ஈடுபடுத்துங்க.
News January 30, 2026
சண்டையில் சாவு என சொல்வது குற்றமில்லை.. கேரள HC தீர்ப்பு

சண்டையின்போது ‘போய் சாவு’ என்று சொல்வதை தற்கொலைக்கு தூண்டியதாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கேரள HC தீர்ப்பளித்துள்ளது. தகாத உறவில் இருந்த இருவரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, கோபத்தில் செத்து போ என்று கூறியதால், பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த குற்றச்சாட்டு மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டவரின் தண்டனையை ரத்து செய்துள்ளது.
News January 30, 2026
துணை முதல்வராகிறாரா அஜித் பவாரின் மனைவி?

அஜித்பவார் விமான விபத்தில் இறந்ததை தொடர்ந்து, அவர் வகித்த DCM பதவிக்கு யாரை தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அஜித் பவாரின் மனைவியும், MP-யுமான சுனேத்ரா பவார், DCM-ஆக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கையை சுனேத்ரா ஏற்றுக் கொண்டதாகவும், மறைந்த அஜித் பவாரின் பாராமதி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிட முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


