News January 30, 2026
மகாத்மா காந்தியும் சென்னையும்!

மகாத்மா காந்தி 1896 முதல் 1946 ஆம் ஆண்டு வரை, 20 முறை சென்னைக்கு வருகை தந்துள்ளார். 1896 ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை வந்த காந்தி, ஜார்ஜ் டவுனில் 14 நாட்கள் தங்கி, பல்வேறு அரசியல் கூட்டங்களை முன்னெடுத்தார். காந்தியின் நினைவாக சென்னையில் ‘உத்தமர் காந்தி சாலையும்’, கிண்டியில் ‘காந்தி மண்டபமும்’ அமைக்கப்பட்டுள்ளது. காந்தியின் நினைவு தினமான இன்று (ஜன.30) அவரை நினைவு கூர்வோம்.
Similar News
News February 1, 2026
சென்னையில் கொடிக்கம்பம் நட இனி அனுமதி கட்டாயம்

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னையில் பொது இடங்களில் தற்காலிகமாக அரசியல் அல்லது மத விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான கொடிக்கம்பங்கள் நடுவது தொடர்பாகப் பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1, 2026 முதல் அமலுக்கு வருகின்றன.
News February 1, 2026
சென்னை: தாயைக் கொன்றுவிட்டு மகன் தற்கொலை

சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் ஜுபாவதி (70). தனது 40 வயது மகன் பிரபுவுடன் வசித்து வந்தார். நேற்று நீண்ட நேரம் கதவை திறக்காததால் அக்கம் பக்கத்தில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையறையில் பிரபு தூக்கில் தொங்கிய நிலையிலும், ஜூபாவதி படுக்கையில் சடலமாகவும் கிடந்தனர். செம்மஞ்சேரி போலீசாரின் விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் தாயைக் கொன்றுவிட்டு பிரபு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
News February 1, 2026
சென்னை தாய்மார்களுக்கு ரூ.11,000

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.


